மத்திய அரசை பாராட்டிய ‘’தி எகனாமிஸ்ட்’’ பிரிட்டிஷ் வார இதழ்

0
200

வங்கித் துறைக்கு புத்துயிர் அளித்ததற்காக மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பிரிட்டீஷ் வார இதழான தி எகனாமிஸ்ட் பாராட்டியுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தின் இழப்புகளை மறைக்கும் கொள்கை எவ்வாறு பேரழிவை ஏற்படுத்தியது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் வங்கிகள் பெரும் லாபத்தை ஈட்டுகின்றன’ என்ற தலைப்பில் வெளியான அதன் கட்டுரையில், “பாரத வங்கிகளின் சமீபத்திய ஆண்டு வருமானம் அற்புதமானது. பாரத அரசுடைமை வங்கிகள் சராசரியாக 11 சதவீதமும் தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட 15 சதவீதத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றன. ஒரு சில வளர்ச்சியின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால், பாரதத்தை சேர்ந்த வங்கிகள் உலகின் அதிக லாபம் ஈட்டும் வங்கிகளில் ஒன்றாக உள்ளன. 2016ல் நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திவால் சீர்திருத்தங்கள், தோல்வியுற்ற நிறுவனங்களை விரைவாக கலைக்க உதவியது. 27 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை 12 வங்கிகளாக இணைத்ததும், போராடி வரும் வங்கித் துறைக்கு புத்துயிர் ஊட்ட மூலதனம் அளிக்கப்பட்டதும் அவற்றின் மறுமலர்ச்சிக்கு வழி வகுத்தது. நிலக்கரி உள்ளிட்ட தொழில்களில் அரசின் உரிமங்களை ஒதுக்கீடு செய்ததில் ஊழல்கள் முடுக்கிவிடப்பட்டன. உச்ச நீதிமன்றம் 2014ல் நூற்றுக்கணக்கான சுரங்க அனுமதிகள், தொலைத்தொடர்பு அனுமதிகளை ரத்து செய்தது” என தி எகனாமிஸ்ட் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here