‘எனது கணவர் லவ் ஜிகாத் பணியில் இருக்கிறார்’ என்று ஆக்ராவை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒரு ஹிந்து பெண் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் லவ் ஜிகாத் மற்றும் முத்தலாக் தொடர்பான மேலும் ஒரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஒரு ஹிந்து பெண், ராஜா கான் என்ற நபரால் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்துள்ளார். 2017ல் ராஜா கான், ஆரம்பத்தில் தன்னை ராஜா என்ற பெயருடைய ஒரு ஹிந்துவாக சித்தரித்துக்கொண்டு அந்த பெண்ணுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். காலப்போக்கில் அவர்களுக்குள் நட்பு வளர்ந்தது. ஒருமுறை ராஜா கான் வீட்டுக்கு அந்தப் பெண் சென்றபோது தான் அவரது உண்மையான மத அடையாளம் அவருக்குத் தெரிந்தது. இதையடுத்து அதிர்ச்சியடந்த அந்தப் பெண் உறவை முறித்துக் கொள்வதாக கூறினார். இருப்பினும், ராஜா கான் அதற்கு உடன்படவில்லை. அந்த பெண்ணை அவரது விருப்பத்திற்கு மாறாக பிணைக் கைதியாக வீட்டில் அடைத்து வைத்திருந்தார். உடல் ரீதியான துஷ்பிரயோகம் செய்தார். பின்னர் ஒரு முஸ்லிம் மதகுரு மூலம் அவரை மதம் மாற்றி கட்டாயத் திருமணம் செய்துகொண்டார். வேறு வழியின்றி அவருடன் வாழ்ந்து வந்த அந்த பெண், ஒரு கட்டத்தில், அவரது கணவர் ராஜா கான், தனது லவ் ஜிஹாத் பணியின் ஒரு பகுதியாக ஏராளமான ஹிந்து சிறுமிகளை பலிகொண்டதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தார். இதனை கேட்டபோது ராஜா கானின் குடும்பத்தினரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். பின்னர், ராஜா கான் அந்த பெண்ணுக்கு சட்டவிரோதமாக தலாக் கொடுத்தார். வீட்டில் இருந்து அவரையும் அவரது குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். அந்த பெண் நீதி கோரி, முதலில் உள்ளூர் ரகாப்கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், நீதிமன்றத்தை அணுகினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது, இதையடுத்து, சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணையைத் தொடங்கினர். இந்த மாதத்தில் மட்டும் ஆக்ராவில் பதிவான இரண்டாவது லவ் ஜிஹாத் வழக்கு இதுவாகும்.