ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கர்நாடகா வருகை

0
71

 

இந்திய கடற்படைக்கு சொந்தமான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’ போர் கப்பல் நேற்று முதல் முறையாக கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரில் உள்ள கடம்பா கடற்படை தளத்திற்கு வந்தது. இதற்கு முன்பு அந்த போர் கப்பல் கொச்சி துறைமுக பகுதியில் அரபிக்கடலில் சுற்றி வந்தது.தற்போது அந்த போர்க்கப்பல் கடம்பா கடற்படை தளத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இங்கு இந்த கப்பல் ஒரு மாதம் இருக்கும் என்றும், எரிபொருள், கப்பல் சிப்பந்திகளுக்கான உணவு ஆகியவற்றை ஏற்றப்பட்டு பின்னர் ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கிழக்கு மற்றும் மேற்கு இந்திய கடலோரங்களில் சுற்றிவர இருக்கிறது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here