ஆர் எஸ் எஸ் 3ஆம் வருட 25 நாள் பயிற்சி முகாம் நாகபுரியில் மே 8 தொடங்கி நடை பெற்று வருகிறது. இதில் நாடெங்கிலும் இருந்து 682 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சி பெற வந்துள்ளனர்.
முகாமின் ஒரு நிகழ்ச்சியாக நகரில் ஒரு அணிவகுப்பு நடத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
முகாமில் பங்கேற்றுள்ள ஸ்வயம்சேவகர் கள் சங்க சீருடை அணிந்து நாகபுரி நகரின் முக்கிய வீதிகள் வழியே கோஷ் இசை முழக்கத்துடன் இன்று அணிவகுப்பு நடத்தினர்.
அணிவகுப்பினை ஆர்.எஸ்.எஸ். (சஹ சர்க்காரியாவாஹ்) இணை பொதுச் செயலாளர் ராம் தத் சக்ரதர், முகாம் அதிகாரி கிருஷ்ண மோஹன், முகாம் செயலாளர் திப்பே ஸ்வாமி, முகாம் சேவா ப்ரமுக் ஷிவ லஹரி, அகில பாரத சஹ சம்பர்க்க ப்ரமுக் சுனில் தேஷ்பாண்டே & ப்ரதீப் ஜோஷி, அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் சுனில் அம்பேகர், நாகபுரி சங்கசாலக் ராஜேஷ் லோயா ஆகியோர் பார்வை யிட்டனர்.
நாகபுரி நகரில் பல இடங்களில் பொது மக்கள் மலர் தூவி அணிவகுப்பினை வரவேற்றனர்.