மே 22, 1867ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தார். தந்தை சிவசம்பு. ஸ்ரீ தியாகப் பிரம்மத்தின் சீடரான உமையாள்புரம் கிருஷ்ண பாகவதர் இவரது குரு. ஆகவே சுவாமிநாத ஐயர் ஸ்ரீ தியாகராஜரின் இசைப் பரம்பரையில் வந்தவர். சுந்தர பாகவதர், மகா வைத்தியநாத சிவன், வீணை வித்துவான் திருவாலங்காடு தியாகராஜர், கெக்கரை முத்து ஆகியோரிடமும் இசை பயின்றார். பாரம்பரிய இசை வழி வந்தாலும், காலத்துக்கேற்றபடி புதிய ஆக்கங்கள் வரவேண்டும் என்ற முன்னேற்றமான கருத்துகளைக் கொண்டிருந்தார். இசை வித்துவான்கள் தமிழ் பாடல்களை பிரபலமடையச் செய்ய வேண்டும். அவர்கள் சைவ நாயன்மார்களின் தோத்திரங்களை அவற்றிற்குரிய பண்ணில் இசையமைத்துப் பாடவேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்