கண_முத்தையா

0
187

#கண_முத்தையா
1. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் செல்வச் செழிப்பு மிக்க ஜமீன் குடும்பத்தில் மே 24, 1913ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையின் மறைவால் 17 வயதிலேயே குடும்ப பாரம் இவரது தோளில் விழுந்தது. மெட்ரிக் தேர்வுகூட எழுத முடியவில்லை. மனம் தளராமல் உழைத்து, தந்தை செய்துவந்த வியாபாரத்தை மீட்டெடுத்தார்.
2. விடுதலை இயக்கப் போராட்டங்களில் பங்கேற்றார். தமிழ், ஆங்கிலம், இந்தியில் புலமை பெற்றவர். 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார்.
3. கம்பை நகரில் உயர்நிலைப் பள்ளி நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றியபோது, நேதாஜியின் வீர உரைகளைக் கேட்டு, அவர் மீது பக்தி கொண்டார்.
4. 1945-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) சேர்ந்து, அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியின் மேடைப் பேச்சுகளை மொழிபெயர்த்தார்.
5. தமிழ் புத்தகாலயத்தை1946-ல் நிறுவினார். ‘நேதாஜியின் புரட்சி’ என்ற நூலை முதன்முதலில் பதிப்பித்து வெளியிட்டார். புதுமைப்பித்தனின் கட்டுரை நூலை முதன்முதலில் பதிப்பித்தார்.
6. நாடு விடுதலை அடைந்த பிறகு, நண்பர் ஒருவர் இவரிடம் வந்து, ‘‘ஐஎன்ஏ தியாகிகளுக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் தருகிறதாம்’’ என்று சொல்லி ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். இவரோ, ‘‘இந்தியாவே எங்களுக்கு சொந்தம் என்று நினைத்தேன். வெறும் 5 ஏக்கரை வாங்கிக் கொடுத்து என்னை ஏன் பிரிக்கப் பார்க்கிறாய்?’ என்று கேட்டு கையெழுத்திட மறுத்துவிட்டார்.
7. நூல்கள் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது.
8. சுதந்திரப் போராட்ட வீரர், படைப்பாளி, பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், நூல் வெளியீட்டாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட கண. முத்தையா 84-வது வயதில் (1997) மறைந்தார்.
#GMuthiahBooks #சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here