ஔரங்கியா என பதிவிட்டதற்காக கைது

0
112

அமீர் ஷௌகத் ஷாஹா என்ற முஸ்லிம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில், சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் குறித்த ‘ஔரங்கியா’ என்ற ஒரு இடுகையைப் பகிர்ந்ததற்காக மகாராஷ்டிர காவல்துறை,. சாகர் வித்தல் வான்கடே என்ற ஹிந்து நபரைக் கைது செய்தது. பின்னர், அவரை சில்லோட் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்தது. மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதாக கூறி காவல்துறை அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பகிர்ந்த அந்த ஓவியத்தில், சாம்பாஜி மகாராஜ் இஸ்லாமிய கொடுங்கோலன் ஔரங்கசீப்பை மிதிப்பதாக சித்தரிக்கப்பட்டு இருந்தது. “அந்தப் பதிவில் ஔரங்கசீப்பை ‘ஔரங்கயா’ என்று அழைத்ததாலும், சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவை தர்மவீரர் என்று அதில் குறிப்பிட்டிருந்ததாலும் எனது மத உணர்வு புண்பட்டது. ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மத உணர்வுகள் புண்பட்டது. அதனால் தான் புகார் அளித்துள்ளேன். சாகர் வான்கடேவின் இந்த செயல் இரு சமூகத்தினரிடையேயான நல்லிணக்கத்தை கெடுக்கிறது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமீர் ஷௌகத் ஷாஹா தனது புகாரில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here