கர்நாடகாவில் 53 இடங்களில் லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் 11 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 15 லோக் ஆயுக்தா காவல் நிலையங்களில் அரசியல் பிரபலங்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 15 புகார்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்புகார்களை பதிவு செய்துள்ள லோக்ஆயுக்தா போலீஸ் படையினர் மாநிலம் முழுதும் 53 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.