ஹிந்துசாம்ராஜ்ய தினம்

0
99

ஆவணி வளர்பிறை த்ரயோதசி நன்னாள் சத்ரபதி சிவாஜி மகராஜ் முடிசூட்டி கொண்ட நாள்

முகமது பின் காசிமின் ஆக்கிரமிப்பிற்கு பின் பாரதத்தில் மிகுந்த இன்னல்கள் ஏற்பட்டது. விஜயநகர சாம்ராஜ்ய வீழ்ச்சிக்குப் பிறகு சமுதாயத்தில் எங்கும் நம்பிக்கை யின்மை பரவியது. சத்ரபதி சிவாஜிக்கு முன்பும் கூட இம்மாதிரி ஒரு நிலைமை தான் இருந்திருந்தது. தான் மகாராஜாவாக வெற்றி பெற்ற விஷயத்தை உலகத்திற்கு சொல்வதற்கு மட்டும் சிவாஜி முடிசூட்டிக் கொள்ளவில்லை. இந்த தேசத்தில் தர்மம், பண்பாடு, சமுதாய பாதுகாப்பு, ஹிந்து ராஷ்ட்ரத்திற்கு எல்லா நிலைகளிலும் உயர்வு ஏற்பட வேண்டிய ஒரு முயற்சி தான் அது, இவ்வாறு அனைத்து முயற்சிகளின் விளைவாகவும் இறுதி வெற்றியாக சிவாஜி மகராஜ் முடிசூட்டி கொண்டார்.

சிவாஜிக்கு முன்பு பல்வேறு பாரத நாட்டு அரசர்கள் தங்கள் எதிரிகளோடு போரிட்டு இருந்தனர். பல்வேறு விதமான யுத்த நீதிகள் பிரயோகங்கள் நடந்து கொண்டிருந்தன. சன்னியாசி பெருமக்களும் சமுதாயத்தை ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். மக்களுடைய கவனங்களை தன் பால் ஈர்க்கும் பொருட்டு அனேக முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். ஆனால் தற்காலிகமாக சில வெற்றிகளும் சில தோல்விகளும் ஏற்பட்டன. ஆனால் சமுதாயத்திற்கு நிரந்தரமாக கிடைக்க வேண்டிய வெற்றி எங்கும் கிடைக்கவில்லை.

இது வெறுமனே சிவாஜி மகாராஜுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல முழு ஹிந்து சமுதாயமும் தன்னுடைய எதிரிகளிடமிருந்து வெற்றி பெற்று ஏறத்தாழ 500 ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. அது சிவாஜி மகாராஜின் முடி சூட்டதலுடன் நடந்தது . ஆகவே இது முக்கியத்துவம் பெறுகிறது.

 

சிவாஜியின் பேராற்றலை கண்டு எல்லோர் மனதிலும் ஒரு நம்பிக்கை பிறந்தது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி, மீண்டும் இந்து சமுதாயத்தை, ஹிந்து தர்மத்தை, ஹிந்து பண்பாட்டை, ஹிந்து கலாச்சாரத்தை, தேசத்தை, உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று பலரும் நம்பினர், அவ்வாறு செய்யக்கூடிய துணிச்சல் சிவாஜிக்கு இருந்தது. அதனால் தான் அவுரங்கசீப்பிடம் வேலை செய்து வந்த கவிபூஷன் தன்னுடைய வேலையை உதறிவிட்டு தென்னகரம் வந்து “சிவாபாவனி” நூலை சிவாஜியின் முன் பாட ஆரம்பித்தார். கவிபூஷனுக்கு பொன்னோ பொருளோ தேவையில்லை. மரியாதையும் தேவையில்லை. ஆனால் அவர் ஔரங்கசீப்பினுடைய தர்பாரில் கவிஞராக இருந்தார். நல்ல இந்துவாக இருந்தார். தேசபக்தராக இருந்தார். இந்த தேசத்தில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கக்கூடிய அதர்மிகளையும் மாற்று மதத்தினரையும் துதி பாடுவது தன்னுடைய வேலை இல்லை என்பதை உணர்ந்தார்.

 

சிவாஜியின் முடிசூட்டு விழாவானது முழு ஹிந்துராஷ்டத்திற்கும் வெற்றி செய்தியை அளித்திருக்கிறது. சிவாஜியுடைய முடிசூட்டு விழாவின் பொருள் தனக்காக அல்ல. தன்னுடைய புகழைப் பரப்ப வேண்டும் என்பதற்காக அல்ல. தனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. இந்த எண்ணம் அவரிடமும் இல்லாமல் இருந்தது. சிவாஜி தன்னுடைய சுயநலத்தை விட்டது மட்டுமின்றி உயிரின் மீதும் ஆசை வைக்காமல் இருந்தார். ஆட்சியாளர்களிடம் தேசத்திற்கு சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என அறிவுறுத்தயிருந்தார். “நீ வேலைக்காக வந்திருக்கிறாயா? ஷத்ரிய குலத்தில் பிறந்த நீ மற்று அரசனுக்காக சேவை செய்கிறாய்? நீ உனது ராஜ்யத்தை உருவாக்கிக் கொள்.” நீ ஒரு ராஜ்யத்தை உருவாக்கி என் நாட்டோடு இணைத்துக்கொண்டு என்னுடன் சேர்ந்ருந்தால் உனக்கு நான் உதவி செய்வேன்”. என்று ஒரு பொழுதும் மற்ற அரசர்களிடம் கூறியதில்லை. ஏனென்றால் அவர் அவ்வாறு செய்யவும் விரும்பவில்லை. அவருடைய நோக்கம் தன்னுடைய பிரதேசம் நாடு என்பதேயன்றி தானே எல்லா அரசர்களுக்கும் அரசராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை. 11

ஏறத்தாழ 340 ஆண்டுகளுக்கு முன்னால் சிவாஜி ஸ்வராஜ்யத்தை, சுய தருமத்தை, சுய மொழியை, சுய தேசத்தை உருவாக்கியிருந்தார். அவருடைய முடிசூட்டு விழா ஒரு சாதாரண மனிதன் அரியணையில் அமர்வது என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு சிவாஜி மகராஜ் ஒரு தனி மனிதனல்லாது எண்ணங்களும் கருத்துக்களும் மிக்க ஒரு யுக சிற்பியாக இருந்தார்.

 

பாரதம் ஸனாதன தர்மத்தை கடைபிடிக்க கூடிய நாடு. இது ஹிந்துஸ்தானம். இங்கே நமது ராஜ்ஜியம் தான் அமைய வேண்டும். நம்முடைய தர்மம் வளர்ச்சி அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கை தத்துவங்கள் விரிவடைய வேண்டும். சிவாஜியின் வாழ்க்கை போராட்டம் இது போன்ற சிந்தனைகள் அடிப்படையில் தான் இருந்தது. இது இறைவனின் விருப்பமான நாடு. ஸ்வராஜ்ய ஸ்தாபனம் என்பது இறைவனுடைய வேலை. இந்த இறைப்பணியை செய்வதற்கு நான் ஒரு சிறு சிப்பாயி மட்டும்தான் என அடிக்கடி கூறி வந்தார்.

 

சிவாஜியின் ஆட்சி ஒரு மேம்போக்கான ஆட்சியாக இருக்கவில்லை. தன் குடும்பத்தினருக்கான ஆட்சி நடத்தவில்லை. அவருடைய ஆட்சி உண்மையில் மக்களாட்சியாக இருந்தது. ஆட்சியில் எல்லோருடைய பங்களிப்பும் இருந்தது. சாதாரண மீனவன் முதல் நன்கு வேதம் படித்த பண்டிதர் வரைக்கும் அவருடைய ஆட்சியில் இடம்பெற்றிருந்தனர். தீண்டாமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. பன்கால் கோட்டையை முற்றுகையிட்ட போது சிவாஜி என்ற பெயரில் போலி சிவாஜியாக இருந்தவரின் பெயர் சிவா காஷித். அவர் முடி திருத்தும் தொழிலாளியாக இருந்தார். அப்சல் கானுடன் நடந்த போரில் சிவாஜி உயிரைக் காப்பாற்றினார். ஆக்ரா கோட்டையின் கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது அவரை துப்பரவு தொழிராளர்களான மதாரி இன மக்கள் காப்பாற்றினார். அவருடைய கோட்டையில் எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்

Full Shot Of Chatrapati Shivaji Maharaj Statue Located On Raigad Fort In Western Sahyadri Ghats

விரிவான விளக்கம்

இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாகவும் மராட்டிய சாம்ராஜ்யத்தின் கௌரவமிக்கவராகவும் திகழ்ந்து வடமேற்கில் பாரத குடியரசு ஆட்சியை நிறுவிய ஒரு மாபெரும் வீரரான சத்ரபதி சிவாஜி 19 பிப்ரவரி 1630 பூனேவில் உள்ள ஜூனார் அருகில் சிவனேரி கோட்டையில் ஷாஜி போன்ஸ்லே மற்றும் ஜிஜா பாய்க்கு மகனாகப் பிறந்தார். அப்பகுதியில் இருக்கக்கூடிய தேவி சிவாயுகே என்ற பெயர்தான் சிவாஜிக்கு சூட்டப்பட்டது.

 

ஜிஜா பாய் தர்ம சிந்தனை கொண்ட பெண்மணியாக திகழ்ந்தார். அவர் தான் சிவாஜியின் முதல் குரு. சிவாஜிக்கு ராமாயணம் மகாபாரதம் மற்றும் பாரத நாட்டு வீரர்கள் மற்றும் மகா புருஷகளின் கதைகளை கூறியிருந்தார்.

 

தாதாஜி கொண்டதேவின் பாதுகாப்பில் சிவாஜி யுத்த கலைகளை நன்கு கற்றிருந்தார். சிவாஜி கொரில்லா போர் முறையினை தோற்றுவித்தவர் என்று கூறப்படுகிறது.

 

சமர்த்த இராமதாசர் சிவாஜியின் குருவாக இருந்தார் சிவாஜி பவானி தேவியின் உபாசகராக இருந்தார்.

 

சிவாஜி 1645 ஆம் ஆண்டு பூனாவுக்கு அருகில் பிஜப்பூர் சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்ட தோரணகோட்டையை இனாயத்ஹானிடமிருந்தும், நர்சலாவிடமிருந்து சாகன் கோட்டை, ஆதில்ஷாவின் கவர்னரிடமிருந்து “கொண்டானா” கோட்டை, மற்றும் சிங்ககட், புரந்தரகோட்டை ஆகியவற்றை தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

 

ப்தாப்கட் கோட்டையில் சிவாஜியின் தலைமையில் நடைபெற்ற யுத்தத்தில் மராட்டிய வீரர்கள் பிஜப்பூர் சுல்தானின் 3000-க்கும் மேற்பட்ட போர் வீரர்களை கொன்று குவித்தனர் பிஜப்பூர் கோட்டை முற்றுகையின் போது சிவாஜி அவுரங்கசீப்பை நோக்கி தன் குறிக்கோளை நகர்த்தினார்.,

1659 ஆம் ஆண்டு அவுரங்கசீப் சிவாஜியை கொல்வதற்காக தன்னுடைய சேனாதிபதி அப்சல் கானை அனுப்பி வைத்தான். சிவாஜியும் அப்சல் காணும் 10 நவம்பர் 1659 ஆம் ஆண்டு பிரதாபகட் கோட்டையில் ஒரு குடிசையில் சந்தித்தனர். அப்சல் கான் சிவாஜியின் மீது தாக்குதல் நடத்தினார். ஆனால் சிவாஜி தான் மறைத்து வைத்திருந்த புலி நகத்தால் அப்சல் கானை தாக்கி தப்பித்துக் கொண்டார். பலமான தாக்குதலின் காரணமாக அப்சல் கான் மரணம் அடைந்தான்.

 

அவுரங்கசீப் தன் மாமா செயிஸ்த்தகானை சிவாஜி மீது தாக்குதல் நடத்த அனுப்பினான். அவனின் தீவிர தாக்குதலால் சிவாஜி சில கோட்டைகள் இழக்க நேரிட்டது. ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு சிவாஜி அதை திரும்ப கைபற்றிக்கொண்டார். முகலாயர்களின் முக்கிய வியாபார ஸ்தலமாக இருந்த சூரத் துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

 

11 ஜூன் 1665 இல் சிவாஜிக்கும் அவுரங்கசீப்பின் ஜெய்சிங்கிற்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்

 

பிரதிநிதியான அடிப்படையில் சிவாஜியிடம் இருந்த 23 கோட்டைகளும் நான்கு லட்சம் ரொக்க பணமும் அவுரங்க ஜீப்புக்கு கொடுக்கப்பட்டது.

 

அவுரங்கசீப் சிவாஜியை ஆக்ராவுக்கு அழைத்ததன் நோக்கம் தன்னுடைய படை பலத்தை அதிகரித்து ஆப்கானிஸ்தானம் வரை முகலாய ஆட்சியை விரிவு படுத்த வேண்டும் என்பதே ஆகும். சிவாஜி தன்னுடைய எட்டு வயது மகன் சம்பாஜியுடன் அவுரங்கசீப்பின் தர்பாருக்கு சென்றார். தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றும் பொருட்டு அவுரங்கசீப் கூறிய தீர்மானங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாக அவுரங்கஜீப் 5000 வீரர்கள் சூழ சிவாஜியை கைது செய்தார். சிவாஜி 17 ஆகஸ்ட் 1666 இல் சம்பாஜியுடன் அவுரங்கசீப்பின் கைதிலிருந்து தந்திரமாக வெளியேறினார்.

 

1670 இல் ஆங்கிலேயர்கள் மூலமாக சிவாஜியின் படைகள் யுத்த தளவாடங்களை விற்பதற்கு மறுத்த காரணத்தினால் 1971 வரை மும்பையில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்கள் டாண்டா, ராஜபுரி போன்ற பகுதிகளின் ஆக்கிரமிப்பை மறுத்த போது சிவாஜி ராஜாபூரில் இருந்த ஆங்கிலேயர்களின் தொழிற்சாலையை முற்றுகையிட்டார்.

பல 6 ஜூன் 1674 இல் ராயகட் கோட்டையில் சிவாஜியின் முடிச்சுட்டு விழா நடந்தது. சிவாஜியின் தலைமையில் மராட்டிய படைகள் தென்னகத்தில் உள்ள ராஜ்ஜியங்களை ஒன்றிணைத்து ஹிந்து சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தனர். அவர் கான்தேஷ், பிஜாபூர், கார்வார், கொல்காபூர், ஜான்ஜிரா, ராம்நகர், பெல்காம் முதலிய மாகாணங்களுடன் வேலூர் மற்றும் செஞ்சி கோட்டை வரை தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி இருந்தனர். தஞ்சாவூர் மற்றும் மைசூரும் அவருடைய ஆட்சியின் கீழ் இருந்தது. தன்னுடைய ஆட்சியின் கீழ் இருந்த கோட்டைகளில் சமஸ்கிருத மொழியை ஆட்சி மொழியாக வைத்திருந்தார். அவர் ஒரு சிறந்த ஹிந்து அரசனாக இருந்த பின்பும் கூட மற்றவர்கள் மீது மிகுந்த பொறுமையும் அன்பும் காட்டி இருந்தார். சிவாஜி பெண்களுக்கு மிக மரியாதை அளித்திருந்தார். ஜாதி சம்பிரதாயத்திற்கு எதிராக இருந்தார். விவசாயிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்த வரி பிரச்சனையை மாற்றி ரைத்வாரி வரி அமைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

 

சிவாஜியின் ஆட்சி அஷ்டப்ரதான் என்று அழைக்கப்பட்டது. இதில் அமைச்சர்களில் முக்கியமானவர் பேஷ்வா என்றும், பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரமுகர் அமைச்சர் எனவும், அரசனுடைய தினசரி அலுவலர்களுக்கு உதவியாக இருப்பவர் மந்திரி எனவும், அலுவலக வேலைகளின் முதன்மையானவர் செயலர் என்றும், வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்க கூடியவர் சுமந்து என்றும், படைத்தலைவன் சேனாதிபதி எனவும், தானம் தர்ம காரியங்களின் பிரமுகர்கள் பண்டிதராஜ் எனவும், நீதி வழங்குவோர் நீதிபதி எனவும் பல முக்கிய பிரமுகர்கள் இருந்தனர்.

 

சிவாஜி ஹிந்து தர்மம் மற்றும் ஹிந்து பரம்பரைகளை ஆதரிக்க கூடியவராக இருந்ததால் ஒவ்வொரு வேலையும் தசராவில் ஆரம்பித்தார்.

 

சிவாஜி 350 மாவள வீரர்களுடன் அவுரங்கச்சிப்பின் மாமா செயிஸ்தஹானின் அறையில் புகுந்து அவருடைய நான்கு விரல்களையும் வெட்டிவிட்டு ஜன்னல் வழியாக குதித்து தப்பித்தார்.

 

சிவாஜி தன் படைகளை திறமையாக நடத்தி இருந்தார். அவரிடத்தில் ஒரு மிகப்பெரிய கப்பற்படை இருந்தது அந்த கப்பற்படையின் முதன்மை அதிகாரி மையங் பண்டாரி என்று அழைக்கப்பட்டார். சிவாஜி கட்டுக்கோப்பான படையும் நன்கு கட்டமைக்கப்பட்ட ஆட்சியாளர்களின் உதவினால் நேர்மையும் திறமையும் வாய்ந்த நல்லாட்சி ஏற்படுத்தியிருந்தார். போரில் புதிய தந்திரங்களை உருவாக்கி இருந்தார். இதன் காரணமாக எதிரிகளை திடீர் தாக்குதல் நடத்தும் முறைகளை கையாண்டிருந்தார்.

 

சிவாஜி காலத்திற்கு தகுந்தவாறு சமுதாயத்தில் பல மாற்றங்களை சிறந்த யோசனையுடன் செய்திருந்தார். நேதாஜி பால்கரை மீண்டும் இந்து மதத்திற்கு கொண்டு வந்தார் பஜாஜ் நிம்போல்கரை மீண்டும் தாய் மதத்துக்கு திருப்பினார். அவரை தாய் மதத்திற்கு திருப்பியது மட்டுமின்றி அந்த சமுதாயத்தினரை நிலைநிறுத்த அவர்களிடம் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார். எப்போதும் விவேகமாகவும் தொலைநோக்கு சிந்தனையுடனும் இருந்தார்.

 

வாள் பலத்தில் இஸ்லாமிய மதமாற்றம் நடந்து கொண்டிருந்தது. சிவாஜியின் கண்ணோட்டம் என்னவென்றால் வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு வசிக்கும் முஸ்லிம்களை அடையாளம் கண்டு அவர்களை வெளியேற்றினார். தன்னுடைய சமுதாயத்தில் இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்களை மீண்டும் தாய் மதம் திருப்பினார். குதுப்ஷாவிற்கு அடைக்கலம் கொடுத்துவிட்டு அவன் அரசவையில் இரண்டு மந்திரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர்கள் இந்துக்களாக இருப்பார்கள் அதன் அடிப்படையில் வ்யங்கண்ணா மாதண்ணா என்ற இரு மந்திரிகள் நியமிக்கப்பட்டதுடன் ஹிந்து பிரஜைகளின் மீது எந்தவிதமான கொடுமைகளும் நிகழ்த்தக்கூடாது என்று அடுத்த கட்டளையும் பிறப்பித்தார்

 

மதமாற்றும் நோக்குடன் போர்ச்சுக்கல் கவர்னர் போர்ச்சுக்கீசிய படை மற்றும் மிஷனரிகளுடன் கோவாவின் மீது படையெடுத்தார். இதை முடிவுக்கு கொண்டு வர அதாவது நம்முடைய தர்மத்தின் படி கோழைத்தனமான தாக்குதல் நடத்தாமல் நேரடியான போராட்டத்தில் ஈடுபட்டார். சிப்ளூண் அருகில் பரசுராமர் கோவிலில் படையை நிறுத்தினார். அவுரங்கசீப்பின் ஆணையினால் காசி விஸ்வநாதர் கோயில் உடைக்கப்பட்டது. “நீங்கள் இறைவனுடைய அருளினால் தான் அரசனாய் இருக்கிறீர்கள் இறைவன் ஹிந்துக்கள் முஸ்லிம்கள் என்ற வேற்றுமை காட்டுவதில்லை நீங்கள் நியாயத்தை கடைபிடிக்க வேண்டும் தாங்கள் ஒருவேளை ஹிந்துக்களின் கோவில்களை உடைத்து சிதைத்து விட்டீர்களானால் என்னுடைய வாள் தான் உங்களுக்கு பதில் அளிக்க வேண்டி இருக்கும் என அவருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

சிவாஜியின் நாடு சிறியதாக இருந்தது. சிவாஜி தன்னுடைய ஆட்சியை வாழ்நாளில் காசிவரைக்கும் கொண்டு செல்வார் என்ற எண்ணம் யாருக்கும் இல்லாமல்

 

இருந்தது. சிவாஜி “காசி விஸ்வநாதர் ஆலயம் இந்த தேசத்தின் மிகவும் புனிதமான இடம். என்னுடைய வேலை தேசத்திற்கான வேலை. ஆனால் அந்த வேலை செய்யும் பொழுது மதம் மாறியவர்களை அன்போடு இணைக்க வேண்டும். அவர்கள் தாய் மதம் திரும்ப வேண்டும். அந்த கோவிலை திருப்பி தர வேண்டும் என்றும் கடிதம் எழுதியிருந்தார்.

 

காலகட்டத்துக்கு ஏற்றவாறு அவருடைய கண்ணோட்டமும் இருந்திருந்தது. ஐரோப்பாவில் இருந்து அச்சுட வேண்டிய மிகவும் பழமை வாய்ந்த இயந்திரத்தை கொணர்ந்து அதை ஆராய்ந்து அது போன்ற இயந்திரங்கள் செய்ய முயற்சி செய்தது அச்சுக்கலைக்கே அவர் செய்த முதல் முயற்சியாகும்.

 

வெளிநாட்டவரிடம் இருந்து சிறந்த பீரங்கிகளும், வாள்களும் வாங்கி அதுபோன்ற வாள்கள் செய்ய வேண்டும் என்று யோசனை செய்திருந்தார். ஸ்வராஜ்யத்தின் பாதுகாப்பிற்காக ஒரு திறன் வாய்ந்த தகவல் அளிக்கும் ஒற்றர்களை கட்டுக்கோப்பாக அமைத்திருந்தார்.

 

பாதுகாப்பிற்கு தேவை என சூழல் ஏற்படலாம் என கருதி கடல் எல்லையும் தன்னுடைய தேசத்தின் அங்கிருந்து கூட நேரடியாக தாக்குதல் நடத்தும் கப்பல்கள் படையை உருவாக்கினார். கடலோர காவல் படையை உருவாக்கி இருந்தார். வெளிநாடுகளில் இருந்து படகு நிர்மாணிக்கும் கலையை கற்றுக் கொண்டதுடன் நம்முடைய நாட்டு சூழலுக்கு ஏற்றவாறு நிபுணர்களை வைத்து உரிய படகுகளும் கப்பல்களும் செய்திருந்தார். சித்தகோட்டை ஸ்வர்ணகோட்டை பத்மகோட்டை விஜயகோட்டை போன்ற நீர் பாதுகாப்பு கோட்டைகளை உருவாக்கினார்.

 

மிகவும் விசாலமான ஒரு கண்ணோட்டத்தை பார்க்க முடிந்தது. தற்கால நிலைமை மட்டும் கருத்தில் கொள்ளவில்லை. ஒரு சுல்தானை மட்டும் தோல்வியடைய செய்து ஸ்வராஜ்யம் உருவாக்குவது அல்ல தனது வேலை. வார்த்தைகளின்றி அவருடைய செயலே சாட்சியாக இருந்தது. இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும்.

 

சிவாஜி மகராஜ் முழு தேசத்திற்காக முயற்சி செய்தார். அவருடைய முடிசூட்டு விழா வெற்றிகரமாக நடந்ததால் அது சிவ சாம்ராஜ்யம் அல்ல ஹிந்து சாம்ராஜ்ய நாள் தான் என்று நாம் பெருமையாக கருத முடியும்.

 

தனிப்பட்ட மனிதரின் நல்ல குணங்களும் லட்சியங்களும் சத்ரபதி சிவாஜியின் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் காண முடிகிறது. ஒழுக்கம், நீதி, ஆட்சித் திறமை, போன்ற புனிதமான விஷயங்கள் தான் இன்று நமக்குத் தேவையாக இருக்கிறது. இதை நாம் புரிந்து கொண்டு நம்முடைய சங்கத்தில் ஆவணி மாத வளர்பிறை த்ரயோதிசியில் சிவாஜி மகராஜ் முடிசூட்டி கொண்ட இந்த நாளை ஹிந்து சாம்ராஜ்ய தினமாக நாம் கருதுகிறோம்.

 

இன்றைய சூழலில் சிவாஜி மகாராஜ் போன்று கடமையும், சிறந்த நற்குணமும், ஒழுக்ககமும் இருக்கக்கூடியவர்கள் நமக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் இதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here