ராணுவ தளவாட உபகரணம் உற்பத்தியில் தமிழக நிறுவனங்கள் ஆர்வம்

0
4007

தமிழகத்தில், சென்னை, சேலம், கோவை, திருச்சி, ஓசூர் வழியாக, ராணுவ தொழில் பெருவழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில், வான்வெளி மற்றும் ராணுவத் துறைக்கு தேவையான தளவாடங்கள், கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைக்க உள்ளன.ராணுவ அமைச்சகம், தமிழகத்தில் உள்ள பெரு வழித்தடத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ராணுவ தயாரிப்பு செயலர் மிகுந்த ஆர்வத்துடன், தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கோவை மாவட்டத்தில் உள்ள சிறு தொழில்கள் சங்க உறுப்பினர்கள், ராணுவத்திற்கான தளவாடங்கள் தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு, ஏற்கெனவே, 40 முதல், 50 உபகரணங்களை தயாரித்து வழங்குகின்றனர். தற்போது, இந்த எண்ணிக்கையை, 110 ஆக உயர்த்தும் வகையில், ‘பாரத் எர்த் மூவர்ஸ்’ நிறுவனம், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனம், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உட்பட, ஏழு பொதுத்துறை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகின்றன.ராணுவ தளவாடங்களுக்கு பங்களிப்பு செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், 50ல் இருந்து, 250 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here