நாகபுரியில் காஞ்சி சங்கராச்சாரியார் : பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

0
120

காஞ்சி சங்கராச்சாரியார் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வாரணாசிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். போகின்ற வழியில் பல ஊர்களில் பக்தர்களை சந்தித்து ஆசி அளித்து வருகிறார். அவர் நேற்று இரவு நாகபுரி சென்றடைந்தார். ஸ்வாமிகளுக்கு விமான நிலையம் அருகில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்வாமிகளை ஆர்.எஸ். எஸ். ஸ்வயம்சேவகர்கள் சந்தித்து ஆசி பெற்றனர். விதர்பா ப்ராந்த சங்கசாலக் ராம்ஜி ஹர்கரே, ப்ராந்த ப்ரச்சாரக் அதுல் ஜி மோகே, நாக்பூர் மஹாநகர் சங்கசாலக் ராஜேஷ் லோயா உட்பட மேலும் பல சங்கப் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.20 வருடங்களுக்குப் பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் நாகபுரிக்கு வருகை புரிந்துள்ளார். காஞ்சி மடத்தில் 2 நாட்கள் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கிட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here