குஜராத்தில் 1 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை : பிரதமர் வாழ்த்து

0
88

சூரத் நகரில் மாநில அளவிலான சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோக பயிற்சியை மேற்கொண்டது பற்றி குஜராத் மாநில உள்துறை மந்திரி ஹர்ஷ சாங்கவி இதனை பாராட்டி டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அந்த செய்தியில், 9-வது சர்வதேச யோகா தினத்தில், நடந்த இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்திற்கும் கூடுதலானோர் பங்கேற்றனர். இந்த குறிப்பிடத்தக்க சாதனை, அனைவருக்கும் யோகா என்ற பிரதமர் மோடிஜியின் அழைப்பை ஏற்றதற்கான ஒரு வெளிப்படையான சான்று என அவர் தெரிவித்து உள்ளார். அந்த டுவிட் பதிவை பிரதமர் மோடி பகிர்ந்துகின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக சூரத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here