வி வி. கிரி மெட்ராஸ் பிரசிடென்சியின் பெர்ஹாம்பூரில் (இன்றைய ஒடிசா, இந்தியா) பிறந்தார். அவரது தந்தை, வி. வி. ஜோகயா பண்டுலு, இவர் ஒரு புகழ்பெற்ற வக்கீல்.கிரி தனது வாழ்க்கை முழுவதும் இந்தியாவில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க இயக்கத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார்.அகில இந்திய ரயில்வே கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினராகவும்,
பொதுச் செயலாளராகவும்பணியாற்றினார்.வங்காள நாக்பூர் ரயில்வே சங்கத்தையும் நிறுவினார், 1928 ஆம் ஆண்டில் வங்காள நாக்பூர் ரயில்வேயின் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற வேலைநிறுத்தத்தில் வழிநடத்தினார். தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஒப்புக் கொள்ளுமாறு பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தையும் ரயில்வே நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கட்டாயப்படுத்துவதில் இந்த வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது, இது இந்தியாவில் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.கிரி சட்டபேரவையில் 1934-ஆம் ஆண்டு உறுப்பினரானார். “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்துக்கு ஆதரித்ததால், ஆங்கில அரசு அவரை சிறையில் தள்ளியது.1952- ஆம் ஆண்டு சட்டசபைக்கு போட்டியிட்டார்.முதல் லோக் சபாவிற்கு பதபத்னம் தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார்.1954-ஆம் ஆண்டு ராஜினாமா செய்யும் வரை தொழிலாளர் மந்திரியாக பதவி வகித்தார்.கிரி 24 ஆகஸ்ட் 1969 அன்று இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.இந்தியாவின் தலைசிறந்த விருதான பாரத ரத்னாவை 1975-ஆம் ஆண்டு பெற்றார் கிரி. சூன் 24, 1980ஆம் ஆண்டு காலமானார்.
#சான்றோர்தினம்