டில்லியில் 17வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

0
201

17வது இந்திய கூட்டுறவு மாநாட்டில் பிரதமர் பேசினார் – இடை தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் PM கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் பயனடைகின்றனர். 4 ஆண்டுகளில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் வங்கி கணக்கில் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. 2014க்கு முன்பு விவசாய துறைக்கு 5 ஆண்டில் 90 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. இப்போது, அதைவிட மூன்று மடங்கு தொகை செலவிடுகிறோம். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க, 9 ஆண்டில்15 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொடுத்துள்ளது. நமது விவசாயிகள் ஒரு மூட்டை யூரியாவை 270 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். அதே மூட்டை பங்களாதேஷில் 720ரூபாய், பாகிஸ்தானில் 800, சீனாவில் 2,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் உர மானியங்களுக்காக மத்திய அரசு 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவு செய்துள்ளது என பிரதமர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here