கல்வியில் இந்தியா முன்னேற்றம் – நிர்மலா சீதாராமன்

0
99

சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலையின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. பல்கலை வேந்தர் ஐசரி கே.கணேஷ் தலைமை வகித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டங்கள் வழங்கி உரையாடும் பொது கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியா கல்வியில் பல முன்னேற்றம் அடைந்துள்ளது. 2014ம் ஆண்டு வரை 720 பல்கலைகள் இருந்தன; தற்போது 1113 பல்கலைகள் உள்ளன. 2014ம் ஆண்டு வரை 51348 மருத்துவ படிப்பு இடங்கள் இருந்தன. தற்போது 99763 உள்ளன. 387 ஆக இருந்த மருத்துவ கல்லுாரிகள் தற்போது 700 ஆக அதிகரித்துள்ள இவ்வாறு அவர் பேசினார். 4305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலை இணை வேந்தர் ஆர்த்தி கணேஷ் வேல்ஸ் குழுமத் துணை தலைவர் ப்ரீத்தா கணேஷ் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here