காரைக்குடியில் புத்தகத் திருவிழா தொடக்கம்

0
120

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் புத்தகத் திருவிழா ஜூன் 30 தொடங்கி ஜூலை 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புத்தகக் கண்காட்சியில் 36 ஸ்டால் விஜயபாரதம் பதிப்பகம் பங்கேற்று உள்ளது . புத்தகத் திருவிழா ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறுகின்றன புத்தக விற்பனையில் 10 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். இதில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான தனித்திறன், இலக்கியப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வார நாள்களில் தினமும் மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையும் புத்தகக் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். காரைக்குடியில் கடந்த 21 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தற்போதைய தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது. புத்தகம் வாசிக்கும் போது ஆயுள் கூடும். எனவே அனைத்துத் தரப்பினரும் புத்தகம் படிப்பதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here