பாகிஸ்தானில் 150 ஆண்டு கால இந்து கோவில் இரவில் இடித்து தரைமட்டம்

0
168

கராச்சி,
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்து இருந்தது.இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர். மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளி கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டு உள்ளது.கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here