இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

0
124


இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரியை இன்று நேரில் சந்தித்து பேசினார். இதில் மேகாங் கங்கா ஒத்துழைப்புக்கான திட்டம் பற்றிய ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.மனித மற்றும் போதை பொருள் கடத்தல் விவகாரங்களை பற்றியும் அவர் எழுப்பினார். இதுபற்றி டுவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், சமீப காலங்களில் சவால்களை சந்தித்த திட்டங்களின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டது.இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை பற்றியும் வலியுறுத்தப்பட்டது.நமது எல்லை பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திர தன்மையை உறுதி செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் பேசப்பட்டது இந்த முத்தரப்பு நெடுஞ்சாலையானது 1,300 கி.மீ. தொலைவில் உருவாகி வருகிறது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும், மியான்மர் மற்றும் தாய்லாந்து இடையேயான வர்த்தக உறவுகள் மேம்படும். பயணம் மற்றும் சுற்றுலா தளங்களுக்கான ஆற்றலை பயன்படுத்தி கொள்ளவும் முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here