2020ம் ஆண்டு முதல் இந்திய சீன எல்லையில் நிலவும் சூழல் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை, பொது மற்றும் அரசியல் உறவு ஆகியவை சிதைந்து விட்டதாக, சீன உயர் அதிகாரியிடம், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள பிரிக்ஸ் அமைப்பின் கூட்டம் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இந்தியா சார்பில் கலந்து கொண்டார். சீனா சார்பில், அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் பிரிவு மற்றும் வெளியுறவு விவகார குழுவின் இயக்குநரான வாங்யீ கலந்து கொண்டார். இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னை குறித்து பேச சீனா சார்பில் வாங் யீயும், இந்தியா சார்பில் அஜித் தோவலும் சிறப்பு பிரிநிதிகளாக நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.2020ம் ஆண்டு முதல் இந்திய சீன எல்லையில் நிலவும் சூழல் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கை, பொது மற்றும் அரசியல் உறவு ஆகியவை சிதைந்து விட்டது. இரு தரப்பு உறவுகள் இடையிலான தடைகளை நீக்க, எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும், நிலைமையை முழுமையாக தீர்க்கவும் தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.