மணிப்பூரில் நடந்ததை இரு மதங்களுக் கிடையே நடைபெற்ற மோதலாக சித்தரிக் கப்பட்டு வருகிறது. உண்மையில் அது 2 இனக் குழுக்கள் இடையே நடைபெற்ற மோதலாகும். இரு இனக்குழுவினரிடையே பகைவுணர்வு தொன்றுதொட்டு நிலவி வருகிறது. சில சட்டங்கள் காரணமாக கலவரம் வெடித்தது. சர்ச்சுகள் அழிக்கப்பட்டது போலவே கோயில்களும் அழிக்கப்பட்டன. மேலும் நிலைமை மோசமடையாமல் இருக்க நாம் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். இரு பிரிவினரிடையே இணக்கமும், அமைதியும் திரும்பிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை சர்ச் மேற் கொண்டு வருகின்றது. நான் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன் என்று இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சில் தலைவரும், மணிப்பூர் இம்பால் பிஷப் Cardinal Oswald Gracias தெரிவித்துள்ளார்.