உயிர் தியாகம் செய்த இந்தியர்களை நினைவு கூர்வோம் – பிரதமர்

0
121

நாட்டின் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவு கூர்வோம் என பிரதமர் மோடி கூறினார். கடந்த 1947ம் ஆண்டு ஆக., 14ல் இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது. அப்போது நடந்த வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் ஆக., 14ம் தேதியை தேசப் பிரிவினை கொடுமைகள் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நினைவு கூர்வோம் இது குறித்து பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 14) சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பிரிவினையின் போது உயிர் தியாகம் செய்த இந்தியர்களை பயபக்தியுடன் நினைவு கூர்வோம். இடபெயர்வின் சுமைகளைச் சுமக்க தள்ளப்பட்டவர்களின் துன்பங்களையும் போராட்டத்தையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here