இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் வழங்கி உதவிய பாரதம்

0
136

கொழும்பு,
இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கைக்கு கடல்சார் கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதாக இந்தியா அறிவித்தது.
அதன்படி டோர்னியர்-228 ரக கடல்சார் கண்காணிப்பு விமானத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி இலங்கைக்கு இந்தியா வழங்கியது. இந்த விமானம் கடந்த ஓர் ஆண்டு காலமாக இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியது.அதை தொடர்ந்து வருடாந்திர பாரமரிப்புக்காக டோர்னியர்-228 விமானத்தை இந்தியாவிடம் இலங்கை ஒப்படைந்தது.இந்த நிலையில் பாரமரிப்புக்காக வந்துள்ள டோர்னியர்-228 விமானத்துக்கு மாற்றாக மற்றொரு டோர்னியர்-228 விமானத்தை இலங்கைக்கு இந்தியா நேற்று வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here