ஜார்க்கண்டில் 30 இடங்களில் அமலாக்கத்துறை “ரெய்டு”

0
214

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.புதுடில்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன. இதையடுத்து. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன. இந்த வழக்கில் டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சர் ராமேஷ்வர் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் சோதனை நடைபெற்றது என அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here