சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் நேரத்தில், வேகமாக சென்று நிலவில் விழுந்தது. எனவே அத்திட்டம் பாதியளவில் தோல்வியடைந்தது. எதனால் தோல்வி ஏற்பட்டது, தோல்வியை தவிர்க்க என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என இஸ்ரோ ஆராய்ச்சி செய்தது. இதற்காக தேசிய அளவிலான ‘தோல்வி ஆராய்ச்சிக்குழு’ அமைக்கப்பட்டது. தலைவராக திருவனந்தபுரம் வலியமலா எல்.பி.எஸ்.சி., இயக்குனர் நாராயணன் நியமிக்கப்பட்டார். குழு சந்திரயான்2வில் ஏற்பட்ட குறைபாடுகளை கண்டறிந்து, சந்திரயான் 3ல் மேம்படுத்த பரிந்துரைகளை செய்தது. இது வெற்றிக்கு வழிவகுத்தது.