எகிப்து வான் பரப்பில் இந்திய வான்படை விமானங்கள்.

0
196

எகிப்து நாட்டின் ஜெட் விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் Bright Star கூட்டு போர் பயிற்சி இன்று கெய்ரோ விமானப்படை தளத்தில் தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறவுள்ள பயிற்சியில், இந்திய விமானப்படை சார்பில் மிக்-29 ரகத்தை சேர்ந்த 5 விமானங்களும், ஐ.எல்-78 ரகத்தை சேர்ந்த 2 எரிபொருள் நிரப்பு விமானங்களும், சி-130, சி-70 ரகங்களை சேர்ந்த தலா 2 விமானங்களும் பங்கேற்றுள்ளன.இந்திய விமானப்படையின் கருடா சிறப்பு படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களுடன் இந்திய ராணுவத்தை சேர்ந்த சுமார் 150 வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.கெய்ரோ வானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த எகிப்து விமானத்திற்கு இந்திய விமானப்படையின் ஐ.எல்-78 ரக எரிபொருள் நிரப்பு விமானம் மூலம் எரிபொருள் நிரப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here