ஆதித்யா எல்-1 விண்கலத்தினல் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள, ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்ற பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது. சமீபத்தில் ஆதித்யா -எல்1 விண்கலத்தின் முதல் முறை சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக இன்று(செப்., 05) அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கை: 282 கி.மீ x 40,225 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது. விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்.10-ம் தேதி மேற்கொள்ளப்படும். ஆதித்யா எல்-1 விண்கலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது.