வாரணாசியில் உள்ள ஞானவாபியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது சேகரிக்கப்பட்ட பொருட்களை, ஆட்சியரிடம் ஒப்படைக்கும்படி, தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகலாயர் ஆட்சியின்போது, ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அங்கு ஞானவாபி வளாகம் கட்டப்பட்டதாக வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தொல்லியல் துறை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆய்வில், ஹிந்து மதம் தொடர்பான பல பொருட்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆய்வின்போது கிடைத்த ஹிந்து மதம் தொடர்பான பொருட்கள், ஆதாரங்களை தனியாக பாதுகாக்க வேண்டும்’ என, மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆய்வின்போது கிடைத்த ஹிந்து மதம் தொடர்பான ஆதாரங்களை, மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும்படி, தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.