ஜெய் ஹிந்த் செண்பகராமன் பிள்ளை பிறந்த நாள்

0
439
செப்டம்பர் 15, 1891 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு “ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் ” ஏற்படுத்தி ‘வந்தே மாதரம்’ என உரிமை முழக்கம் இட்டார். பல பட்டங்கள் பெற்றார். ஐரோப்பிய மொழிகள் பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்தியாவிற்கு வெளியே இருந்து கொண்டே பிரித்தானிய கிறிஸ்தவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற, இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர். ‘எங்களை யாராலும் வெல்ல முடியாது’ என்று இறுமாந்திருந்த இங்கிலாந்து கடற்படையினரைப் பொடேரென தலையில் தட்டிவிட்டுப் போனது இவரது வந்த எம்டனின் ( கப்பலின்) சாதனை விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கத்தை முதலில் முழங்கியவர் செண்பகராமன் பிள்ளை. இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார். நீர்மூழ்கிக் கப்பலில் நீண்ட காலம் நெடுந்தூரம் பயணம் செய்து தொடர்ந்து டீசல் புகையை சுவாசித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு 42-ஆம் வயதில் 1934-ல் இறந்தார். சுதந்திரம் கிடைத்த பின்பும் கூட 20 ஆண்டுகள் காங்கிரஸ் அரசுடன் போராடி அவரது துணைவியார் லஷ்மி பாய், டாக்டர் செண்பகராமன் அவர்களின் அஸ்தியைக் கொண்டு வந்து நாஞ்சில் நாட்டு வயல் வெளிகளில் தெளித்து அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here