‘லவ் ஜிகாத்’ வாலிபரை தேடி காஷ்மீர் சென்ற பெங்களூரு போலீசார்

0
1404

காஷ்மீரைச் சேர்ந்தவர் மொஜீப் அஷ்ரப் பெய்க். பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தார். தன்னுடன் பணிபுரிந்த, வேறு சமூக இளம்பெண்ணை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவருடன் நெருங்கி பழகினார். இளம்பெண்ணை, ‘லவ் ஜிகாத்’ எனும் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றார். இதற்கு, இளம்பெண் உடன்படவில்லை. இதனால், கொலை மிரட்டல் விடுத்தார். பாதிக்கப்பட்ட இளம்பெண், பெங்களூரு போலீசார் உதவியை நாடினார். பின், போலீசில் புகார் அளித்தார். மொஜீப் அஷ்ரப் பெய்க் மீது, ஏழு பிரிவுகளில் வழக்குப் பதிவானது.. தலைமறைவான மொஜீப் காஷ்மீரில் பதுங்கி இருக்கலாம் என்பதால், அவரை தேடி ஹெப்பகோடி போலீசார் காஷ்மீருக்கு சென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here