ஒன்றரை மணி நேரத்தில் சென்னை – திருப்பதி : அசத்தும் வந்தே பாரத்

0
1601

சென்னை சென்ட்ரல் – ஆந்திர மாநிலம், விஜயவாடா வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி கடந்த, 24ம் தேதி துவக்கி வைத்தார். இந்த ரயில் செவ்வாய் கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். சென்ட்ரலில் இருந்து அதிகாலை, 5:30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை, 7:05 மணிக்கு ரேணிகுண்டா, 8:39 மணி நேரத்தில் செல்கிறது. திருப்பதிக்கு அருகே உள்ள ரேணிகுண்டாவுக்கு ஒன்றரை மணி நேரத்தில் செல்வது, திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.
பயணியர் சிலர் கூறுகையில்:-
‘வந்தே பாரத் ரயிலில் ரேணிகுண்டா வரை பயணம் செய்தது நல்ல அனுபவமாக உள்ளது. அதிர்வு இல்லாமல், சொகுசாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது. அடுத்த, 30 நிமிடங்களில் திருப்பதி செல்ல முடிகிறது’ என்றனர்.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
ரேணிகுண்டா செல்ல மற்ற விரைவு ரயில்கள் இரண்டரை மணி முதல் மூன்று மணி நேரம் எடுத்து கொள்கின்றன. ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக திருப்பதி ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், வந்தே பாரத் ரயில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here