தமிழகத்தில் இரு அமைச்சர்களை நீக்கக்கோரி கவர்னரிடம் வி.எச்.பி., மனு

0
208

சென்னை கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவியை நேற்று மாலை 4:00 மணிக்கு, வி.எச்.பி., தேசிய செயல் தலைவர் அலோக்குமார் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்கு பிறகு அலோக்குமார் அளித்த பேட்டி: விளையாட்டு துறை அமைச்சர் முதல்வரின் மகன் என்பதால், அவரது பேச்சை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்தி, சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் பணியில் பல அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. வெறுப்பை வளர்க்கும் சக்திகளை தமிழக அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவர்னர் ரவியிடம் நேரில் கோரிக்கை விடுத்தோம். அமைச்சர்களே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பேசுவதால், அரசமைப்பு சட்டப்படி தமிழகத்தை நடத்த முடியாத நிலை உருவாகி உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சர் , இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி கவர்னரிடம் மனு அளித்தோம். என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here