துாய்மை காற்று திட்டத்தில் திருச்சிக்கு 6 இடம்,சென்னை 37வது இடம்

0
1310

நாட்டின் முக்கிய நகரங்களில் மாசு குறைக்கும் வகையில், மத்திய அரசு, தேசிய துாய்மை காற்று திட்டத்தை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 132 முக்கிய நகரங்களில், 20 முதல், 30 சதவீதம் காற்று மாசு அளவை குறைப்பதற்கான திட்டம், செயல்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், இந்த பட்டியலில் உள்ள முக்கிய நகரங்களில் காற்று மாசு அளவை அடிப்படையாக கொண்டு, தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், தமிழகத்தில் உள்ள திருச்சி, 180 மதிப்பெண்களுடன், 6வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மாநகராட்சி 37வது இடம், மதுரை மாநகராட்சி 44 இடத்தையும் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here