அமெரிக்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை

0
164

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை அக்டோபர் 14-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்தியாவில் பாஜக அரசு பட்டியல் இன மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உவிகளை வழங்கி வருகிறது. இதனால், பட்டியல் இன மக்கள் பாஜக மீது மிகுந்த நம்பிகையோடு உள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்குச் சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே இருக்கும் அம்பேத்கர் சிலைகளில் மிக உயரமான சிலை இது என்று கூறப்படுகிறது.

அக்டோபர் 14 -ம் தேதி 19 அடி உயர அம்பேத்கர் சிலை திறக்கப்பட உள்ளது. சிலை திறப்பு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நினைவுச் சின்னம் அம்பேத்கரின் போதனைகளைப் பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள மிகப் பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய புகழ்பெற்ற சிற்பி ராம் சுடார், அம்பேத்கர் சிலையை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here