ககன்யான் திட்டதில் அக்டோபர் 21-ல் முதல்கட்ட சோதனை – இஸ்ரோ

0
167

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ கடந்த 2007-ம் ஆண்டு 10,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கியது. இத்திட்டத்துக்கு கடந்த 2014-ல் ககன்யான் என்று பெயரிடப்பட்டது., ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. பூமியிலிருந்து 400 கி.மீ. தொலைவு சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 பேர் கொண்ட விண்வெளி வீரர் குழுவினரை அனுப்பி 1 முதல் 3 நாட்கள் வரையிலான ஆய்வுக்குப் பிறகு பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முக்கியப் பகுதியாக வரும் அக்டோபர் 21-ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை ககன்யான் சோதனை விமானத்தை விண்ணில் செலுத்த முடிவு செய்திருக்கிறது.
இஸ்ரோ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் : – , “ககன்யான் முதல்கட்ட சோதனைக்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளன. அக்டோபர் 21-ம் தேதி காலை 7 முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்திலிருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை விமானம் விண்வெளியில் செலுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறது. இத்திட்டம் வெற்றிபெற்றால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 4-வது நாடாக இந்தியா உருவெடுக்கும். இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here