‘ஆப்பரேஷன் சக்ரா – 2’ என்ற பெயரில், சி.பி.ஐ., ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதில், 100 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய மோசடியும் அடங்கும். இந்த திட்டத்தின் கீழ், கிரிப்டோகரன்சி வழங்குவதாக, நாடு முழுதும், 100 கோடி ரூபாய் வசூலித்து ஏமாற்றப்பட்டுள்ளது. மற்றும் ‘அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட்’ நிறுவனங்களின், ‘கால்சென்டர்’ எனப்படும் உதவி மையங்கள் பெயரில் போலி ‘கால்சென்டர்’களை நடத்தி, பல நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் தொடர்புடைய ஒன்பது கால்சென்டர்கள் மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான, தமிழகம் உட்பட, 10 மாநிலங்களில் உள்ள, 76 இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில், 32 மொபைல் போன்கள், 48 லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மோசடியில் தொடர்புடைய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.