ஒவ்வொரு ஆண்டும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உலகளவில் முதல் இரண்டு சதவீத ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியல், அவர்களின் ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் வெளியிடுவது வழக்கம். இதில் பாலக்காடு ஐ.ஐ.டி., இயக்குனர் பேராசிரியர் சேஷாத்திரி சேகர், உயிரியல், அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி ஆகியோர், இடம் பிடித்துள்ளனர். இந்த பிரிவு பட்டியலில், மொத்தம் 2,04,633 விஞ்ஞானிகள் இடம் பிடித்துள்ளனர். இரண்டாவது பிரிவில், உயிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் ஜகதீஷ்பேரி, வேதியியல் பிரிவு பேராசிரியர் முனைவர் யுகேந்தர் கவுட் கோத்தகிரி, வேதியியல் மற்றும் உயிரியல் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவு பேராசிரியர் முனைவர் அப்துல் ரஷீத், மின் பொறியியல் பிரிவு இணைப்பேராசிரியர் சபரிமலை மணிகண்டன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இந்த சாதனை, பாலக்காடு ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சி சிறப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.