வயநாட்டில் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே – துப்பாக்கி சூடு

0
177

கேரளாவின் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உருப்பும்குட்டி வன பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, கேரள போலீசின் சிறப்பு படையினர் சம்பவ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், ஜெட்டிதோடி பகுதியில் மாவோயிஸ்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.இதில் 2 முகாம்கள் இருப்பது தெரிய வந்ததும், அவற்றை சோதனையிட்டனர். முகாம்களில் ரத்த கறைகள் இருந்துள்ளன. இதனால், அவர்கள் துப்பாக்கி சூடு மோதலில் காயமடைந்து இருக்க கூடும் என கூறப்படுகிறது.
அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த வாரம் வயநாட்டில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சூழலில், மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here