நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணிக்கு கேப்டன் ரோகித், சுப்மன் ஜோடி துவக்கம் தந்தது. எதிரணி பந்துவீச்சை வழக்கம்போல ரோகித் வெளுத்து வாங்கி 47 ரன்னில் ஆட்டமிழந்தார். பின், இணைந்த சுப்மன், கோலி சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய விராட் கோலி 117 ரன்னில் அவுட்டானார். ஸ்ரேயாஸ் (105) சதம் கடந்தார். இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 397 ரன் குவித்தது. 398 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் எடுத்தது. 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று பைனலுக்கு தகுதி பெற்றது.
பரபரப்பான அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். பேட்டிங் பவுலிங் அனைத்திலும் இந்திய அணி சிறந்து விளங்கியதாக புகழாரம் சூட்டி உள்ளார்.