இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த கப்பலை ஹூதி தீவிரவாதிகள் கடத்தல்

0
99

சா்வதேச கடல் வழித்தடமான செங்கடல் ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களுக்கு இடையே இந்திய பெருங்கடலுக்கு நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. துருக்கியிலிருந்து அப்பகுதி வழியாக ‘கேலக்ஸி லீடா்’ சரக்கு கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஹெலிகாப்டரில் வந்த ஆயுதப் படையினா், கப்பலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி, கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் ஈரானிய பயங்கரவாத நடவடிக்கை’ என இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் கண்டனம் தெரிவித்தது. மேலும், அந்தக் கப்பலில் இஸ்ரேலியா்கள் யாரும் பணியில் இல்லை எனவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பின்ஸ், பல்கேரியா, ருமேனியா, உக்ரைன், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த மாலுமிகள் கப்பலில் பணியில் இருந்தனா்’ எனத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜப்பான், ‘சவூதி அரேபியா, ஓமன், ஈரான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் இணைந்து மாலுமிகள் விரைவாக மீட்கப்படுவா்’ என உறுதியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here