இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது. இது தொடர்பாக ஐ.நா., பொது அவையின் கூட்டத்தில் நிரந்த இந்திய தூதர் ருசிரா கம்போஜ் பேசியது: சர்வதேச கூட்டமைப்புகளால் மேற்கொள்ளப்படும் போர் வீரியத்தைத் தணிக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா வரவேற்கிறது. வாழ்வாதார தேவைகள் பாலஸ்தீன மக்களுக்கு சென்று சேர வேண்டும். பயங்கரவாதம் எந்தவிதத்தில் இருந்தாலும் அதனை உறுதியாக எதிர்க்கிறோம். வன்முறைக்கு எதிராகவும் நிற்கிறோம். மனிதநேய அடிப்படையிலான தற்காலிக போர் நிறுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். அமைதி உருவாக அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Home Breaking News ‛‛பயங்கரவாதம் எந்தவிதத்தில் இருந்தாலும் அதனை உறுதியாக எதிர்க்கிறோம். – ஐநாவின் இந்திய தூதர்