9 நாட்களுக்குப் பிறகு முதல் தடவையாக சூடான கிச்சடி வழங்கப்பட்டது: நவம்பர் 12 அன்று உத்ராகண்டில் சாலைப் பணிக்காக உத்தரகாசி சில்க்யாராவில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடை பெற்று வரும் பாதையில் திடீர் மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் அதில் சிக்கி விட்டனர். 9 நாளைக்குப் பிறகு சுரங்க இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச் அகலமுள்ள குழாயின் வழியாக இன்று சூடான கிச்சடி வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்களை மீட்க்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்து நடக்கும் போது அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் அனைவரும் நன்கு அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பகுதியில் இருந்ததால் உயிர் பிழைத்தனர். அவர்களுக்குத் ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்கப்பட்டது. தகவல் தொடர்பு இருந்து வருகிறது. மின் வசதி துண்டிக்கப் படவில்லை. தொழிலாளர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். விரைவில் மீட்க்கப்படுவர்.