இரண்டாவது காசி தமிழ்சங்கம்!

0
4606

காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பழங்கால கலாச்சார தொடர்புகளை மீண்டும் கண்டறிந்து உறுதிப்படுத்தி, கொண்டாடும் முயற்சிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது “காசி தமிழ் சங்கமம்” (காசி) நிகழ்ச்சி டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வாரணாசியில் நடைபெற உள்ளது. புனித தமிழ் மாதமான மார்கழியின் முதல் பாதியில் கருத்துப் பரிமாற்றங்கள் கல்வி – கருத்தரங்குகள், இந்திய கலாச்சாரத்தின் இரண்டு பண்டைய வெளிப்பாடுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து வல்லுநர்கள் / அறிஞர்களிடையே விவாதங்கள் ஆகியவை நடைபெறும்.

இரண்டு இடங்களுக்கு இடையிலான இணைப்புகள் மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை வெளிக்கொணர்வதில் கவனம் செலுத்தப்படும்.

காசி மற்றும் தமிழ்நாட்டின் அறிவு மற்றும் கலாச்சார மரபுகளை நெருக்கமாகக் கொண்டு வருவதும், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை உருவாக்குவதும் புரிந்து கொள்வதும், பிராந்தியங்களுக்கு இடையே மக்களுக்கு இடையிலான பிணைப்பை ஆழப்படுத்துவதும் இதன் பரந்த நோக்கமாகும்.

இரண்டு பிராந்தியங்களை பற்றிய பாரம்பரிய அறிவு புத்தகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளில் அறிவுசார் பொக்கிஷமாகவும், அதே போல் வெவ்வேறு தொழில்களின் பயிற்சியாளர்களுடனான நடைமுறை வடிவத்திலும் பகிர்வு போன்ற தொடர்ச்சியான முயற்சிகள், அறிவார்ந்த மற்றும் நடைமுறை ஆகிய இரண்டு துறைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று உணரப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தனித்துவமான பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில் தமிழ்நாட்டிலும் இதுபோன்ற விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

காசி வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு அறிவு மற்றும் பண்பாட்டு மையங்கள் மூலம் இந்தியாவின் நாகரிகச் சொத்துக்களில் உள்ள ஒற்றுமையைப் புரிந்து கொள்வதற்கு தமிழ் சங்கமம் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.

ஒரே பாரதம், உன்னத பாரதம். (ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்) என்கிற உள்ளுணர்வை நிலைநிறுத்த இத்தகைய புரிதல் அவசியம். இந்திய அறிவு முறைகள், கல்வி மற்றும் பயிற்சி நடைமுறைகள், கலை மற்றும் கலாச்சாரம், மொழி, இலக்கியம் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள், பயிற்சி வல்லுநர்கள் போன்றவர்களுக்கு இது தனித்துவமான கற்றல் அனுபவமாக இருக்கும்.

இவை அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையில் (2020) குறிப்பிடப்பட்டுள்ளபடி பல்துறை உள்நோக்கங்கள் மற்றும் தொடர்ச்சியான கற்றலின் தேவையுடன் இணைந்துள்ளன.

கல்வி மற்றும் இணை கல்வி அமர்வுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களால் நன்கு தொகுக்கப்பட்ட அமர்வுகள் மூலம் பிணைக்கப்பட்ட கருத்திழைகள் சிறப்பாகப் பிணைந்திருக்க வேண்டும் மற்றும் தகவல் மற்றும் அனுபவங்களின் கலாச்சார பரிமாற்றத்திற்கு ஒரு நல்ல தளத்தை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here