விஜயபாரதம் முன்னாள் ஆசிரியர் திரு.சுந்தரஜோதி (68) ரயில் விபத்தில் மரணம்.

0
639

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர். இவருடைய தந்தை திரு. சுந்தரம் அவர்கள் பின்னி மில்லில் ஒரு தொழிலாளியாக பணிபுரிந்தவர். அவரும் சங்க ஸ்வயம்சேவகர். அதனால் திரு. சுந்தர ஜோதியும் சிறுவயதிலேயே சங்க ஷாகா வரத் தொடங்கி பின்னர் பிராசாரக்காக வந்தவர். பெற்றோர்களுக்கு ஒரே மகன். இருந்த போதிலும் சங்கப் பிரச்சாரக்காக பணியாற்றிட பெற்றோர்கள் அனுமதி அளித்துள்ளனர்.கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சங்க பிரசாரக்காக இருந்தவர். தொடக்கத்தில் வேலூர் நகர் பின்னர் திருவண்ணாமலை பிரசாரக், அதன் பிறகு ராமேஸ்வரம் விபாக் பிரசாரக்காக பணிபுரிந்தவர். 1996 முதல் 2006 வரை விஜயபாரதம் வார இதழ் ஆசிரியர். அச்சமயத்தில் பல இளைஞர்களை இதழியல் துறையில் பணிபுரிய ஊக்கமளித்தவர். உடல் நலம் சற்று குன்றி இருந்ததால் சேத்துப்பட் சங்க காரியாலயத்திலேயே தங்கியிருந்து வந்தார். நேற்று மாலை சேத்துப்பட் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் அகால மரணமடைந்தார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் சேத்துப்பட் காரியாலயத்தில் இன்று நண்பகல் அல்லது மாலையில் நடைபெறும். திரு. சுந்தர ஜோதியின் ஆன்மா சத்கதி அடைந்து அமைதி பெற வேண்டுகிறேன். ஓம் சாந்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here