14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பாரத பிரதமர்

0
196

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, பாஜகவைச் சேர்ந்த வெளியுறவுத் துறை இணை மந்திரி முரளீதரன் நேற்று எழுத்து வாயிலாக அளித்த பதிலில் : கடந்த 2014 முதல், 14 நாடுகளின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பெற்றுள்ளார். பிரதமராக பதவியேற்றது முதல், இதுவரை, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா, பூட்டான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரமாகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here