ஜாதி வாரி கணக்கெடுப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் எழுச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும் -சுனில் அம்பேகர்

0
298

ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம், எந்தவிதமான பாகுபாடும் சமத்துவமின்மையும் இல்லாத, நல்லிணக்கம் மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் இந்து சமுதாயத்தை இலக்காகக் கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பல்வேறு வரலாற்றுக் காரணங்களால் சமூகத்தின் பல கூறுகள் பொருளாதாரம், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கியது உண்மைதான். அவர்களின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு அரசாங்கங்கள் அவ்வப்போது பல்வேறு திட்டங்களையும் ஏற்பாடுகளையும் செய்கின்றன, அவை சங்கம் முழுமையாக ஆதரிக்கிறது.

கடந்த சில நாட்களாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. இது சமூகத்தின் ஒட்டுமொத்த எழுச்சிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும், இதைச் செய்யும்போது, சமூக நல்லிணக்கமும் ஒற்றுமையும் எக்காரணம் கொண்டும் உடைந்துவிடாமல் இருப்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

இவ்வாறு அகில பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் தனது X வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here