கலிபோர்னியாவில் ஹிந்து கோயில் அவமதிப்பு

0
354

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் நெவார்க் நகரில் உள்ள ஹிந்து கோயில் ஒன்றின் வெளிப்புற சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கோயிலுக்கு அருகில் வசிக்கும் பக்தர்களில் ஒருவர், கட்டடத்தின் வெளிப்புறச் சுவரில் கருப்பு மையில் ஹிந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை பார்த்து கூறினார். இதனையடுத்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here