காஷ்மீரில் வதந்திகள் பரவுவதைத் தடுக்க இணைய சேவை முடக்கம்.

0
219

ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. ராணுவ வாகனத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ராணுவ வாகனங்கள் சேதமுற்றன. ராணுவ அதிகாரிகள் உள்பட 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். களநிலவரம் குறித்து ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் தகவல் எதுவும் தெரிவிக்காத நிலையில், வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவும் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here