அயோத்யா ஶ்ரீ ராம ஜன்ம பூமி ஆலயத் திற்கு நாமக்கல்லில் தயாரான மொத்தம் 1,200 கிலோ எடையுள்ள 42 மணிகள் பூஜை செய்த பின்னர் அனுப்பி வைக்கப்பட்டன. ஓவ்வொரு மணியும் வெவ்வேறு எடை கொண்டவை. 120 கிலோவில் 5, 70 கிலோவில் 6, 25 கிலோவில் ஒரு மணி என பல வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மணிகளைத் தயாரித்த ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ஆர்.ராஜேந்திரன் “ஒரு மணியின் விலை ₹ 1,200 ஆகும். அயோத்யா ராமர் ஆலயதிற்காக என்பதால் தொழிலாளர்களின் கூலியாகிய ₹ 600 ஐ மட்டும் பெற்றுக் கொண்டோம்” என்று கூறுகிறார். ஜய் ஶ்ரீராம்