இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் சூழலில் ஹமாஸ் போராட்டக் குழுவின் நிறுவனர்களில் ஒருவரும் துணை தலைவருமான சலே அல்-அரூரி, மேற்குக் கரையில் உள்ள குழுவிற்கு தலைமை தாங்கி வந்தார். இந்நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் சலே அல்-அரூரி உயிரிழந்ததாக லெபனான் மற்றும் பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் போர் தீவிரமாகும் என தெரிகிறது.பாலஸ்தீனத்தின் அதிபர் மஹ்மோத் அப்பாஸ் உடன் நல்லுறவு கொண்டிருந்த அரூரி, போட்டி குழுக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முயன்று வந்தார். இதனிடையே, லெபனானில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் குறிவைத்தால் பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா தலைவர் சையத் ஹசன் நஸ்ரல்லா உறுதியளித்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.