அயோத்தியில் 70 ஏக்கரில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள மொத்தம் 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 106 நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள்ளது, இதில் கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டையில் ராம ஜோதி ரத ஊர்வலதில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேர் குடும்பத்தினருக்கு, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான நரசிம் மய்யா, பாபு, சங்கர், ராஜா ஆகியோரது குடும்பத்தினர், கும்பாபிஷேக விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு துணையாகவும், வழிகாட்டவும் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த விஎச்பி பிரமுகர் பாபு என்பவரும் அழைக்கப்பட்டுள்ளார். அதற்கான அழைப்பிதழை, நேற்று ஆர்எஸ்எஸ் வடதமிழ்நாடு மாநில இணை அமைப்பாளர் ஸ்ரீ ப்ரசோபாகுமார் நேரில் வழங்கினார்.
Home Breaking News ராம ஜோதி ரத ஊர்வலதில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேர் குடும்பத்தினருக்கு ராமர் கோயில்...